ADDED : செப் 30, 2026 06:07 AM

அ நிறம் | அளவு
சேலம்'; சேலம், கன்னங்குறிச்சி மோட்டாங்குறிச்சியை சேர்ந்தவர் ராஜேந்திரன், 68. இவருக்கு மாதவன், 50, சீனிவாசன், 44, என இரு மகன்கள் உள்ள நிலையில், தமிழரசன், 35, என்பவர் வளர்ப்பு
மகனாக உள்ளார்.
தமிழரசன் அடிக்கடி பணம் கேட்டு, ராஜேந்தி-ரனை தொந்தரவு செய்தார். அதன்படி நேற்று முன்தினம், 2 லட்சம் ரூபாய் கேட்டபோது, அவ-ரது சகோதரர்கள் மாதவன், சீனிவாசன் கேட்க, வாக்குவாதம் முற்றியது. இதில் தமிழரசனை, கட்டை, இரும்பு கம்பியால் தாக்கினர். படுகாயம் அடைந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் புகாரில், கன்னங்குறிச்சி போலீசார் விசா-ரித்து, மாதவன், சீனிவாசனை கைது செய்தனர்.
