ADDED : அக் 20, 2024 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'குரங்கு பெடல்'
கலந்துரையாடல்
சேலம், அக். 20-
சேலத்தில் மூவேந்தர் கலை தொடர்பு நிலையம் சார்பில், 'குரங்கு பெடல்' சினிமா குறித்த கலந்துரையாடல் நேற்று நடந்தது. குறிப்பாக, 'குரங்குபெடல் திரையிடலும், கலந்துரையாடலும்' என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடந்தது.
அதில், அப்படம் எடுக்கப்பட்ட விதம் குறித்து, படத்தின் இணை இயக்குனர் நந்தகுமார், எழுத்தாளர் ராசி அழகப்பன், மூவேந்தர் அரங்கின் ஹென்றி கிேஷார், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் லியோபால் கலந்துரையாடினர்.