sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கால்நடைகளுக்கு பரவும் நோய் தோட்டத்தில் சிகிச்சை அவசியம்

/

கால்நடைகளுக்கு பரவும் நோய் தோட்டத்தில் சிகிச்சை அவசியம்

கால்நடைகளுக்கு பரவும் நோய் தோட்டத்தில் சிகிச்சை அவசியம்

கால்நடைகளுக்கு பரவும் நோய் தோட்டத்தில் சிகிச்சை அவசியம்


ADDED : டிச 26, 2025 04:57 AM

Google News

ADDED : டிச 26, 2025 04:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி அடுத்த குரால்நத்தத்தில் ஏராளமான விவசா-யிகள் கால்நடை வளர்ப்பு மூலம் வருமானம் ஈட்டி வருகின்றனர். ஆனால் கறவை மாடுகளின் கால் குளம்புகளில் கொப்பளம் தோன்றி புண் ஏற்படுகிறது. இந்த நோய், மற்ற கால்நடைக-ளுக்கும் பரவி வருகிறது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயி குமார் கூறியதாவது:குரால்நத்தத்தில், 1,000 மாடுகளின் கால்களில் புண்கள் ஏற்பட்-டுள்ளன. இது, கோமாரி நோய் அறிகுறி. நோய் பாதித்த மாடுகள், உணவு சாப்பிடாமல், பால் கறக்காமல், நிற்க முடி-யாமல் படுத்துக்கொள்கின்றன. எங்களால் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல முடியவில்லை.

இதுபற்றி அரசு கால்நடை மருத்துவரிடம் தெரிவித்தோம். அவர், 'மாடுகளை மருத்துவமனைக்கு அழைத்து வாருங்கள். இல்லை-யெனில் ஆம்புலன்ஸூக்கு தகவல் சொல்லுங்கள்' என கூறு-கிறார். நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளை வந்து பார்ப்ப-தில்லை. அரசு கால்நடை மருத்துவர்கள், தோட்டத்துக்கே நேரில் வந்து, நோய் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us