/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தேவாலயங்களில் திருப்பலி
/
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தேவாலயங்களில் திருப்பலி
ADDED : டிச 26, 2025 04:57 AM

ஓமலுார்:கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, ஓமலுார் அருகே ஆர்.சி.செட்-டிப்பட்டியில் உள்ள புனித ராயப்பன் சின்னப்பர் தேவாலயத்தில், நேற்று முன்தினம் இரவு, பங்குத்தந்தை ஜோசப்பவுல்ராஜ் தலை-மையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
நேற்று காலை, 8:30 மணிக்கு நடந்த கிறிஸ்துமஸ் சிறப்பு விழாவில், ஆர்.சி.செட்டிப்பட்டியில் உள்ள தொழுநோய் மறு-வாழ்வு மைய இயக்குனர் விமல் தலைமையில் பிரார்த்தனை நடந்தது. திரளானோர் பங்கேற்றனர். அதேபோல் நாரணம்பாளையம் அன்னை ஜெயராகினி மாதா கோவிலில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
மேலும் சேலம், 4 ரோடு குழந்தை இயேசு பேராலயத்தில் நேற்று காலை நடந்த சிறப்பு பிரார்த்தனையில், திரளானோர் பங்கேற்-றனர்.
ஆத்துார், ராணிப்பேட்டை, புனித ஜெயராக்கினி அன்னை ஆல-யத்தில், பங்குத்தந்தை அருளப்பன் தலைமையில் சிறப்பு திருப்-பலி நடந்தது.
இயேசு பிறப்பு குறித்த குடிலை, ஏராளமானோர் பார்வையிட்-டனர். அதேபோல் கெங்கவல்லி, கோனேரிப்பட்டி, செந்தாரப்-பட்டி, வீரகனுார், தலைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேவலாயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது.

