/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
துாங்கிய பட்டதாரியிடம் மொபைல் திருட்டு
/
துாங்கிய பட்டதாரியிடம் மொபைல் திருட்டு
ADDED : டிச 26, 2025 04:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: நாமக்கல் மாவட்டம் மங்களபுரத்தை சேர்ந்தவர் காசி, 26. பி.காம்., பட்டதாரியான இவர், நேற்று முன்தினம் சேலத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில், வேலைவாய்ப்பு நேர்-காணலுக்கு சென்றார். பின் அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட, இரவு, 10:00 மணிக்கு, ஆத்துார் புது பஸ் ஸ்டாண்ட் வந்தார்.
பஸ் இல்லாததால், அங்கேயே துாங்கிக்கொண்டிருந்தார். அதி-காலை, 4:00 மணிக்கு எழுந்தபோது, அவரது சட்டை பாக்-கெட்டில் வைத்திருந்த, 27,000 ரூபாய் மதிப்பிலான, ஆன்ட்-ராய்டு போனை காணவில்லை. அவர் புகார்படி, ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

