/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட புறம்போக்கு நிலம் அகற்றம்
/
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட புறம்போக்கு நிலம் அகற்றம்
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட புறம்போக்கு நிலம் அகற்றம்
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட புறம்போக்கு நிலம் அகற்றம்
ADDED : அக் 18, 2024 07:22 AM
இடைப்பாடி: கொங்கணாபுரம் அருகே, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த அரசு புறம்போக்கு நிலத்தை இடைப்பாடி வருவாய்த்துறையினர் நேற்று அகற்றினர்.
இடைப்பாடி தாலுகா, கொங்கணாபுரம் அருகே பாலப்பட்டி பகுதியில், அரசுக்கு சொந்தமான பாதை புறம்போக்கு நிலத்தை அப்பகுதியை சேர்ந்த சாந்தி, செல்லம் ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, இடைப்பாடி தாலுகா அலுவலகத்தில் அப்பகுதியை சேர்ந்த சிலர் மனு கொடுத்திருந்தனர். ஆயினும் வருவாய்த்துறையினர் அகற்றவில்லை. இதனால் ரங்கபாஸ் என்பவர், ஆக்கிரமிப்புகளை அகற்ற தாலுகா அலுவலகத்திற்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, இடைப்பாடி தாசில்தாருக்கு உயர்நீதிமன்றம் கடந்த ஜூலையில் உத்தரவிட்டது. இதையடுத்து, நேற்று தாசில்தார் வைத்தியலிங்கம் தலைமையிலான வருவாய்த்துறையினர், கொங்கணாபுரம் அருகே பாலப்பட்டி பகுதியில் சாந்தி, செல்லம் ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்து இருந்த பாதையை கையகப்படுத்தினர்.