/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மருத்துவர்கள் மீது அக்கறையின்றி செயல்படும் அமைச்சர் தேசிய முன்னாள் துணைத்தலைவர் அதிருப்தி

ADDED : நவ 15, 2024 02:20 AM
மருத்துவர்கள் மீது அக்கறையின்றி செயல்படும் அமைச்சர்
தேசிய முன்னாள் துணைத்தலைவர் அதிருப்தி
சேலம், நவ. 15-
''மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மருத்துவர்கள் மீது அக்கறையின்றி செயல்படுகிறார். கிண்டி சம்பவத்தில் அவரது செயல்பாடு அதிருப்தி அளிக்கிறது'' என, இந்திய மருத்துவ சங்க, தேசிய முன்னாள் துணைத்தலைவர் பிரகாசம் கூறினார்.அவர் மேலும் கூறியதாவது: சென்னையில் அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்துக்கு, அமைச்சர் சின்ன கத்தி தானே என பொறுப்பின்றி பேசுகிறார். தற்போதைய சம்பவத்தில் முதல்வர் தொலைபேசியில் பேசியது பாராட்டுக்குரியது. ஆனால் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், மருத்துவர்கள் மீது அக்கறையின்றி செயல்படுகிறார். அவரது செயல்பாடு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இனி குற்றச்சம்பவங்கள் நடந்தால், 12 மணி நேரத்தில் வழக்குப்பதிய வேண்டும். 15 நாட்களுக்குள் குற்ற நகல் வழங்க வேண்டும். மருத்துவமனையில் முக்கிய இடங்களுக்கு மருத்துவமனை நிர்வாகமும் போலீசாரும் பாதுகாப்பு வழங்க வேண்டும். குற்றம் செய்வோர் மீது ஜாமினில் வர முடியாதபடி சட்டங்களை கொண்டு வர வேண்டும். மருத்துவர்கள் மீதான தாக்குதல் குறித்து எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். இல்லை எனில் போராட்டம் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார். சேலம் மாவட்ட தலைவர் சாது பகத்சிங், செயலர் குமார், தலைவர் தேர்வு மோகனசுந்தரம், துணைத்தலைவர் ராஜேஷ் உள்பட பல மருத்துவர்கள் உடனிருந்தனர்.