'தனித்திறமைகளை அடையாளம் கண்டு எதிர்கால சூழலை கட்டமைக்க வேண்டும்'
'தனித்திறமைகளை அடையாளம் கண்டு எதிர்கால சூழலை கட்டமைக்க வேண்டும்'
ADDED : நவ 29, 2026 01:09 AM
சேலம்: இந்திய பட்டய கணக்காளர் சங்கத்தின் சேலம் கிளை சார்பில், அதன் மாணவர் அமைப்பான, 'சிகாசா' சார்பில், 2 நாள் இளைஞர் திருவிழா, அதன் அலுவலகத்தில் நேற்று தொடங்கியது.
அதில் டாக்டர் ஆர்த்தி பேசுகையில், ''இன்றைய மாணவர்கள், உளவியல் ரீதியான சவால்களை எதிர்கொண்டு, கவனச்சிதறல்களை தவிர்த்து மன ஒருமைப்பாட்டுடன் இலக்கை நோக்கி அடைய வேண்டும். எதிர்கால இந்தியாவின் முன்னேற்றத்தில், இளைஞர்களின் பங்கு அளப்பரியதாக இருக்க வேண்டும். அதற்காக மாணவர்கள், தனித்திறமைகளை அடையாளம் கண்டு தன்னம்பிக்கையுடன் எதிர்கால சூழலை கட்டமைத்துக்கொள்ள வேண்டும்,'' என்றார்.
மூத்த பட்டய கணக்காளர் சேகர், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பட்டய கணக்காளரின் பங்களிப்பு, எதிர்கால இந்தியாவின் வளர்ச்சி, இளம் பட்டய கணக்காளர்கள் ஏற்க வேண்டிய பொறுப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.
'சிகாசா' தலைவி கவுரி, சேலம் கிளை தலைவர் நந்தகுமார், செயலர் ஜோதிபாலன், துணைத்தலைவர் கார்த்திகேயன், பொருளாளர் சொக்கநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.
