ADDED : நவ 28, 2026 06:50 AM

அ நிறம் | அளவு
பனமரத்துப்பட்டி:தும்பல்பட்டி
ஊராட்சியில் சாமகுட்டப்பட்டி, வேடப்பட்டி, நுாலாத்துக்கோம்பை,
அடிமலைப்பட்டி, ஜல்லுாத்துப்பட்டி, நடுப்பட்டி உள்ளிட்ட
மலைகிராமங்கள் உள்ளன.
அதில் அடிமலைப்பட்டி, வேடப்பட்டி, கோம்பை
உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள், மானாவாரியாக கொள்ளு
பயிரிட்டுள்ளனர். ஆனால் மழை பெய்யாததால், செம்மண் பூமியில் முளைத்த
நிலையில் கொள்ளு பயிர் வாடி வதங்கியுள்ளது.
இதுகுறித்து
விவசாயிகள் கூறியதாவது: மலை கிராமங்களில் ஆண்டுதோறும்
வீட்டுக்கு தேவையான கொள்ளு, தட்டைப்பயறு, மொச்சை, குத்து அவரை
மானாவாரியாக சாகுபடி செய்வது வழக்கம். பருவமழையை எதிர்பார்த்து,
புரட்டாசியில் கொள்ளு விதைத்தோம். பயிர் முளைத்த நிலையில், வயல் உழவு
செய்த, புழுதி அடங்கும்படி கூட மழை வரவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
