ADDED : நவ 01, 2024 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆதரவற்றோருக்கு
புத்தாடை வழங்கல்
ஆத்துார், நவ. 1-
தீபாவளி பண்டிகையையொட்டி ஆத்துார் இளைஞர் நல அமைப்பு குழுவினர் நேற்று, சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் என, 5 பேரை கண்டறிந்தனர். பின், சிகை அலங்காரம் செய்பவர்களை அழைத்துச்சென்று, அந்த, 5 பேருக்கும் சிகை அலங்காரம் செய்து குளிக்க வைத்தனர். பின் புத்தாடை, சாப்பாடு வழங்கினர். தொடர்ந்து, சாப்பிட வைத்து மகிழ்ந்தனர்.

