/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அ.தி.மு.க.,வுக்கு எதிரான துண்டு பிரசுரம் வழங்கல்
/
அ.தி.மு.க.,வுக்கு எதிரான துண்டு பிரசுரம் வழங்கல்
ADDED : ஏப் 20, 2025 01:42 AM
சேலம்:
தி.மு.க.,வின், சேலம் மத்திய மாவட்ட செயலர், அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் தகவல் தொழில்நுட்ப அணியினர், நேற்று கன்னங்குறிச்சியில், துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர். அங்குள்ள சந்தை பகுதியில் வியாபாரிகள், மக்களை சந்தித்து வழங்கினர். தொடர்ந்து, வீடுதோறும் சென்றும் வழங்கினர்.
அதில், அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் மின்கட்டண உயர்வுக்கு காரணமான உதய் மின் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தது, விவசாயி என கூறி, விவசாயிகளை பாதிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்ற ஆதரவு உள்ளிட்ட, அ.தி.மு.க.,வின் பல்வேறு நடவடிக்கைகள் துண்டறிக்கையில் இடம்பெற்றுள்ளன. கன்னங்குறிச்சி பேரூர் செயலர் தமிழரசன், முன்னாள் தலைவர் பூபதி, தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் உள்பட கட்சியினர் உடனிருந்தனர்.

