/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மலைவாழ் மக்களுக்கு விதை, மரக்கன்று வழங்கல்
/
மலைவாழ் மக்களுக்கு விதை, மரக்கன்று வழங்கல்
ADDED : செப் 02, 2024 02:18 AM
ஆத்துார்: ஆத்துார் வன கோட்டத்தில் தமிழக சுற்றுச்சூழல் மேம்பாட்டு வாழ்வாதார மேம்பாட்டு திட்டத்தில் கல்வராயன்மலை, பச்ச-மலை மலைவாழ் பழங்குடியினருக்கு வீட்டு உபயோக காய்கறி விதைகள், மரக்கன்று வழங்கும் விழா,
தம்மம்பட்டியில் நேற்று நடந்தது. அதில், 200 பேருக்கு காய்கறி விதைகள், குடும்பத்துக்கு தலா, 3 மா வீதம், 600, இரு கொய்யா வீதம், 400 என, 1,000 மரக்-கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன. தொடர்ந்து பயிரிடும் நடைமுறைகள், பழம் தரும் இனங்களின் நவீன தொழில்நுட்பங்கள், காய்கறி பயிர் சாகுபடி குறித்து பெங்க-ளூரு இந்திய தோட்டக்கலை மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி செந்தில்குமார்
பேசினார். பழங்குடியினர் நலனுக்கு பல்வேறு திட்டங்கள் குறித்து, ஓய்வு பெற்ற வங்கி பொது மேலாளர் ராமநாதன் பேசினார். ஆத்துார் கோட்ட வன அலுவலர் ஆரோக்யராஜ் சேவியர், வனச்சரகர்கள் கெங்கவல்லி சிவக்குமார், தும்பல்
விமல்ராஜ், ஆத்துார் ரவிபெ-ருமாள், தம்மம்பட்டி முருகேசன் உள்ளளிட்டோர் பங்கேற்றனர்.