/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தீபாவளி பண்டிகை எதிரொலி எண்ணெய் விற்பனை அதிகரிப்பு
/
தீபாவளி பண்டிகை எதிரொலி எண்ணெய் விற்பனை அதிகரிப்பு
தீபாவளி பண்டிகை எதிரொலி எண்ணெய் விற்பனை அதிகரிப்பு
தீபாவளி பண்டிகை எதிரொலி எண்ணெய் விற்பனை அதிகரிப்பு
ADDED : அக் 17, 2024 09:28 PM
சேலம்:நாடு முழுதும் தீபாவளி பண்டிகை வரும், 31ல் கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை மக்கள் புதிய ஆடைகள் அணிந்து, பட்டாசு வெடித்து, இனிப்புடன் கொண்டாடுவர்.
இனிப்பு, காரம் செய்வதற்காக பயன்படுத்தப்படும் எண்ணெய் விற்பனை, சேலத்தில் வழக்கத்தை விட சற்று கூடுதலாக உள்ளது.
சேலம் மாநகர தாவர எண்ணெய் வணிகர்கள் சங்க தலைவர் சந்திரதாசன் கூறியதாவது:
எப்போதும் பண்டிகை நாட்களுக்கு முன்பாகவே, எண்ணெய் விற்பனை அதிகரித்து காணப்படும். அதன்படி தற்போதைய தீபாவளிக்கு இதுவரை, 20 சதவீதம் அளவுக்கு எண்ணெய் விற்பனை அதிகரித்துள்ளது.
கடந்த காலங்களில், அதிக எண்ணிக்கையில் வீடுகளில் இனிப்பு தயார் செய்து வந்தனர். அதேபோல் பலகார சீட்டு மூலம் இனிப்புகளை மக்கள் வாங்குவர். இந்த பழக்கம் குறைந்து விட்டதால், எண்ணெய் விற்பனையும் பெரிதாக இல்லை.
பெரும்பாலான மக்கள் கடைகளில் இனிப்பு பொருட்களை வாங்குகின்றனர். தற்போது மழையால் எண்ணெய் விற்பனை பாதித்துள்ளது. செப்., மாதம் எண்ணெய் இறக்குமதிக்கான வரியை, 25 சதவீதம் வரை மத்திய அரசு உயர்த்தியது.
இதனால் எண்ணெய் விலையும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. மேலும் தேங்காய் உற்பத்தி பாதிப்பால், தேங்காய் எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது.
பாமாயில் லிட்டர், 90ல் இருந்து, 125 ரூபாய், சூரியகாந்தி எண்ணெய், 100லிருந்து, 130, தேங்காய் எண்ணெய், 200லிருந்து, 240, கடுகு எண்ணெய், 150லிருந்து, 180, தவுட்டு எண்ணெய், 125லிருந்து, 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடலை எண்ணெய் லிட்டர், 175 ரூபாய், நல்லெண்ணய் லிட்டர், 360 ரூபாய் என, விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனையாகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.