/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தி.மு.க., - தலைவி மீது நடவடிக்கை இல்லை சொந்த கட்சி கவுன்சிலர்கள் 4 பேர் போராட்டம்
/
தி.மு.க., - தலைவி மீது நடவடிக்கை இல்லை சொந்த கட்சி கவுன்சிலர்கள் 4 பேர் போராட்டம்
தி.மு.க., - தலைவி மீது நடவடிக்கை இல்லை சொந்த கட்சி கவுன்சிலர்கள் 4 பேர் போராட்டம்
தி.மு.க., - தலைவி மீது நடவடிக்கை இல்லை சொந்த கட்சி கவுன்சிலர்கள் 4 பேர் போராட்டம்
ADDED : ஆக 21, 2025 02:15 AM
கெங்கவல்லி,
தி.மு.க., - தலைவி மீதான புகாரில் நடவடிக்கை இல்லை என கூறி, அதே கட்சி கவுன்சிலர்கள், 4 பேர், டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர்.
கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி டவுன் பஞ்சாயத்தில், 15 வார்டுகள் உள்ளன. அதில், 10 தி.மு.க., 3 அ.தி.மு.க., 2 சுயேச்சை கவுன்சிலர்கள் உள்ளனர். 5வது வார்டில் வென்ற, தி.மு.க.,வை சேர்ந்த லீலாராணி, தலைவியாக தேர்வு செய்யப்பட்டார்.
அவரும், 6வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் குமரேசன் ஆகியோர், முன்மொழிபவர், வழிமொழிபவர் விபரம் இல்லாமல், தவறான தகவலுடன் வேட்புமனு தாக்கல் செய்ததால் நடவடிக்கை எடுக்கக்கோரி, அதே கட்சியின், 2வது வார்டு கவுன்சிலர் பவுனாம்பாள், தேர்தல் கமிஷனுக்கு, 2024ல் புகார் செய்தார்.
இந்நிலையில் நேற்று காலை, 8:00 மணிக்கு, தி.மு.க., - கவுன்சிலர்களான பவுனாம்பாள், 12வது வார்டு கவிதா, 14வது வார்டு சுப்ர மணி, 4வது வார்டு நல்லதம்பி மற்றும் தி.மு.க.,வை சேர்ந்த பேரூர் துணை செயலர் ரமேஷ் ஆகியோர், டவுன் பஞ்சாயத்து அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வார்டுகளிலும் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படவில்லை என கூறினர். 11:30 மணிக்கு, செயல் அலுவலர் சிவக்குமார் பேச்சு நடத்தினார்.
அப்போது, 'மனு பரிசீலனையின்போது புகார் அளிக்காமல் தேர்தல் முடிந்து, 3 ஆண்டுக்கு பின் ஆட்சேபனை மனு செய்துள்ளதால் நடவடிக்கை எடுக்க வழி இல்லை என, தேர்தல் கமிஷன் விளக்க கடிதம் அனுப்பியுள்ளது.
வார்டுகளில் அடிப்படை வசதி குறித்து ஆய்வு செய்து தீர்வு காணப்படும்' என்றார். பின், மதியம், 12:00 மணிக்கு, கவுன்சிலர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

