sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம் தி.மு.க., - கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

/

100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம் தி.மு.க., - கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம் தி.மு.க., - கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம் தி.மு.க., - கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 25, 2025 05:29 AM

Google News

ADDED : டிச 25, 2025 05:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில், மகாத்மா காந்தி பெயர் நீக்கம் செய்த மத்திய அரசையும், அதற்கு ஒத்துழைப்பு தரும், அ.தி.மு.க., அரசையும் கண்டித்து, நேற்று காலை, 10:00 மணிக்கு கொளத்துார், மேச்சேரி ஒன்றிய அலுவலகங்கள் முன், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்-பாட்டம் நடந்தது.

மேச்சேரியில், தி.மு.க.,வின், சேலம் மேற்கு மாவட்ட செயலர் செல்வகணபதி, கொளத்துாரில் தலைமை செயற்குழு உறுப்பினர் ராமநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், தி.மு.க., கூட்டணியை சேர்ந்த காங்., வி.சி., பிற கட்சி நிர்வா-கிகள் பங்கேற்றனர்.மேச்சேரி, கொளத்துாரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய செயலர்கள் சீனிவாச பெருமாள், மிதுன் சக்கரவர்த்தி, கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அதேபோல் பனமரத்துப்பட்டியில் ஒன்றிய செயலர் உமாசங்கர்; அயோத்தியாப்பட்டணத்தில், சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம்; ஏற்காட்டில் ஒன்றிய செயலர் ராஜேந்திரன்; கொங்க-ணாபுரத்தில் மாவட்ட துணை செயலர் சம்பத்குமார்; இடைப்பா-டியில் மாவட்ட துணை செயலர் எலிசபெத்ராணி; சங்ககிரியில், மாவட்ட அவைத்தலைவர் தங்கமுத்து; ஓமலுாரில், சேலம் மத்-திய மாவட்ட, தி.மு.க., பொருளாளர் கார்த்திகேயன்; தாரமங்க-லத்தில், தலைமை செயற்குழு உறுப்பினர் முருகேசன் தலை-மையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.






      Dinamalar
      Follow us