sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஜல்லிக்கட்டுக்கு ஒரு மாதத்துக்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்

/

ஜல்லிக்கட்டுக்கு ஒரு மாதத்துக்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்

ஜல்லிக்கட்டுக்கு ஒரு மாதத்துக்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்

ஜல்லிக்கட்டுக்கு ஒரு மாதத்துக்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்


ADDED : டிச 25, 2025 05:29 AM

Google News

ADDED : டிச 25, 2025 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த ஒரு மாதத்துக்கு முன்பே ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்-பட்டுள்ளது.

இதுகுறித்து கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:சேலம் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பான விதிமுறைகள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில் தமிழக பிராணிகள் வதை தடுப்பு சட்டப்படி, ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துப-வர்கள், காளை உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் நல்ல உடல் நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டோர் மட்டும் பங்கேற்க வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்த, ஒரு மாதத்துக்கு முன்பே, www.jallikattu.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

பங்கேற்கும் காளைகள், 2 வயதுக்கு மேற்பட்டு, 120 செ.மீ.,க்கு மேல் உயரம் இருக்க வேண்டும். போட்டிக்கு வெளியூர் காளைகளை அழைத்து செல்லும்போது, தகுந்த பாது-காப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். போட்டியின்-போது காளைகளின் கண்களில் மிளகாய் பொடி துாவுதல், ஊக்க மருந்து கொடுத்தல், கூரிய கருவிகளால் துன்புறுத்தல் கூடாது. இதுகுறித்து உரிய அலுவலர்கள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.

பங்கேற்கும் காளைகளால் மாடுபிடி வீரர்களுக்கோ, பார்வையா-ளர்களுக்கோ பாதிப்பு ஏற்படாமல் இருக்க, கொம்புகளுக்கு ரப்பர் காப்பு அணிவிக்க வேண்டும். மாடுபிடி வீரர்கள், காளைகளை போட்டிக்கு முன் மருத்துவ பரிசோதனை செய்வது அவசியம். போட்டி நடக்கும் பகுதியில் வருவாய், பொதுப்பணி, மருத்-துவம், கால்நடை பராமரிப்பு போலீஸ் ஆகியோர் ஒன்றிணைந்து ஆய்வு செய்து வழிகாட்டு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகி-றதா என கண்காணிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us