/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சைக்கிள் மீது கார் மோதல்: தி.மு.க., கிளை செயலர் பலி
/
சைக்கிள் மீது கார் மோதல்: தி.மு.க., கிளை செயலர் பலி
சைக்கிள் மீது கார் மோதல்: தி.மு.க., கிளை செயலர் பலி
சைக்கிள் மீது கார் மோதல்: தி.மு.க., கிளை செயலர் பலி
ADDED : நவ 27, 2025 11:50 PM
கெங்கவல்லி: சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தி.மு.க., கிளை செயலர் பரிதாபமாக பலியானார்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நடுவலுார் ஊராட்சி பள்ளக்காட்டை சேர்ந்தவர் நல்லாங்கியன், 60. தி.மு.க., கிளை செயலரான இவர், நேற்று காலை, 7:00 மணிக்கு, பள்ளக்காடு பஸ் ஸ்டாப்பில் உள்ள கடைக்கு, சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கார் மோதியதில், துாக்கி வீசப்பட்ட நல்லாங்கியன் உயிரிழந்தார். காரில் இருந்த இருவர் உயிர் தப்பினர்.
கெங்கவல்லி போலீசார் கூறியதாவது:
சென்னை, நெசப்பாக்கத்தை சேர்ந்த, ஐ.டி., ஊழியர்கள் பிரவீன்குமார், 28, ராஜசேகர், 32. இவர்கள் கொல்லிமலை செல்ல, 'சுசுகி இக்னிஸ்' காரில், 'கூகுள் மேப்'பை பார்த்தபடி சென்றனர். பிரவீன்குமார் காரை ஓட்டினார். ஆத்துார் பைபாஸ் சாலையில் இருந்து, ராசிபுரம் வழியே கொல்லிமலைக்கு செல்ல வேண்டும். 'கூகுள் மேப்'பை பார்த்து ஓட்டிய நிலையில், ஆத்துார் - கெங்கவல்லி சாலைக்கு தவறுதலாக வந்து விட்டனர்.
அத்துடன் அதிவேகமாக ஓட்டியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

