ADDED : ஜன 01, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்,
'நாளை நடக்கும் ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட மகளிரணி, மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்' என, தி.மு.க., மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கையில், 'நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட மாவட்ட மகளிரணி, மகளிர் தொண்டரணிகளுக்கான ஆலோசனை கூட்டம், நாளை நாமக்கல் - திருச்சி சாலை, நளா ஓட்டலில், காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. கூட்டத்தில், பூத் வாரியாக மகளிரணி, மகளிர் தொண்டரணி நிர்வாகிகளை நியமிப்பது குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது. அதில், ஒன்றிய, நகர, டவுன் பஞ்.,களுக்கான மகளிரணி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

