/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.17 லட்சம் மோசடி; தி.மு.க., கவுன்சிலர் கைது
/
ரூ.17 லட்சம் மோசடி; தி.மு.க., கவுன்சிலர் கைது
ADDED : நவ 20, 2024 07:35 AM
ஆத்துார்: வாடகைக்கு லாரி, பொக்லைன் எடுத்து அதற்கு, 17 லட்சம் ரூபாயை தராததோடு, போலி ஆவணங்கள் தயாரித்து பயன்படுத்தியதாக, தி.மு.க., கவுன்சிலரை, போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே கீரிப்பட்டியை சேர்ந்தவர் கணேசன், 38. கீரிப்பட்டி டவுன் பஞ்சாயத்து, 7வது வார்டு, தி.மு.க., கவுன்சிலராக உள்ளார். இவர், 2023ல் நரசிங்கபுரத்தை சேர்ந்த ஜெயக்குமார், 38, என்பவரிடம், டிப்பர் லாரி, பொக்லைன் வாகனங்களை, மாத வாடகைக்கு எடுத்தார். அந்த வாகனங்களை, குடியாத்தத்தை சேர்ந்த செந்தில், சக்திவேல் ஆகியோருக்கு, உள்வாடகைக்கு விட்டார். இதில் ஜெயக்குமாருக்கு, 17 லட்சம் ரூபாய்க்கு மேல் வாடகை தராத நிலையில் அந்த வாகன இன்ஜின் நெம்பரை மாற்றி, போலி ஆவணங்கள் தயாரித்து பயன்படுத்தி வந்ததும் தெரிந்தது.
இதுகுறித்து, சில நாட்களுக்கு முன் ஜெயக்குமார், கணேசனிடம் கேட்டுள்ளார். அப்போது, லாரி ஏற்றி கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்ததாக, ஜெயக்குமார், மல்லியக்கரை போலீசில் புகார் அளித்தார். இதனால் மோசடி செய்தல், போலி ஆவணம் உள்பட, 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார், நேற்று முன்தினம், கணேசனை கைது செய்தனர்.

