/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பூ பறித்துக்கொண்டிருந்த தி.மு.க., - கவுன்சிலர் பலி
/
பூ பறித்துக்கொண்டிருந்த தி.மு.க., - கவுன்சிலர் பலி
பூ பறித்துக்கொண்டிருந்த தி.மு.க., - கவுன்சிலர் பலி
பூ பறித்துக்கொண்டிருந்த தி.மு.க., - கவுன்சிலர் பலி
ADDED : நவ 20, 2024 07:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: ஆத்துார் அருகே அரசநத்தத்தை சேர்ந்த, பழனிசாமி மனைவி லிங்கம்மாள், 63. இவர், 2019 - 20ல், அ.தி.மு.க., சார்பில் கவுன்சிலராக வெற்றி பெற்று, ஆத்துார் ஒன்றிய குழு தலைவியாக தேர்வு செய்யப்பட்டார். 2022ல், தலைவி பதவியை ராஜினாமா செய்ததோடு, அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, தி.மு.க.,வில் இணைந்தார்.
பின், ஆத்துார் ஒன்றிய கவுன்சிலராக இருந்தார். நேற்று மதியம், அவரது தோட்டத்தில் பூக்கள் பறித்துக்கொண்டிருந்த நிலையில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். மல்லியக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.