/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அறங்காவலர் குழு தலைவராக தி.மு.க., 'மாஜி' கவுன்சிலர் தேர்வு
/
அறங்காவலர் குழு தலைவராக தி.மு.க., 'மாஜி' கவுன்சிலர் தேர்வு
அறங்காவலர் குழு தலைவராக தி.மு.க., 'மாஜி' கவுன்சிலர் தேர்வு
அறங்காவலர் குழு தலைவராக தி.மு.க., 'மாஜி' கவுன்சிலர் தேர்வு
ADDED : பிப் 11, 2025 07:33 AM
ஆத்துார்: ஆத்துார் பஸ் ஸ்டாண்ட் அருகில், வெள்ளை விநாயகர் கோவில் உள்ளது. இங்கு அறங்காவலர் குழு உறுப்பினர்களாக தி.மு.க., மாவட்ட பிரதிநிதியும், முன்னாள் கவுன்சிலருமான ஸ்டாலின் (இவரது
மனைவி ஜீவா, தற்போது தி.மு.க., கவுன்சிலராக உள்ளார்), சித்ரா, குகன், சிவக்குமார், மதுரைமேகம்
ஆகியோரை நியமித்து, தமிழக அரசு உத்தரவிட்டது.கோவில் வளாகத்தில் நேற்று தேர்தல் நடைபெறுவதாக, ஹிந்து சமய அறநிலையத்துறை, சேலம்
உதவி ஆணையர் ராஜா அறி-வித்தார். மதியம், 1:00 மணியளவில் தேர்தல் அலுவலரும், உதவி
ஆணையருமான ராஜா வந்தார். 1:30 மணியளவில் ஐந்து பேரும் ஓட்டு பெட்டிக்குள், தலைவரை தேர்வு
செய்து சீட்டு போட்டனர். தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் ஸ்டாலின், அறங்காவலர் குழு தலைவராக
தேர்வு செய்யப்பட்டதாக, மாவட்ட நியமன குழு தலைவர் முருகன் அறிவித்தார். மதியம், 2:00
மணியளவில் தேர்தல் சான்று பெற்று, குழு தலைவராக ஸ்டாலின் பொறுப்-பேற்றுக் கொண்டார்.* கெங்கவல்லி அருகே, செந்தாரப்பட்டி ஓணான்கரடு பகுதியில், பாலதண்டாயுதபாணி கோவில்
உள்ளது. இங்கு அறங்காவலர்க-ளாக வீ.சுந்தரராஜூ, கி.சுந்தர்ராஜ், முருகேசன், ராமசாமி, ராணி
ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நேற்று, ஹிந்து சமய அறநி-லையத்துறை உதவி ஆணையர் ராஜா
தலைமையில், அறங்கா-வலர் குழு தலைவர் தேர்தல் நடந்தது. இதில், வீ.சுந்தரராஜூ, குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டு, பதவியேற்றுக் கொண்டார்.