/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விஜயகாந்த் நினைவு நாளை ஒட்டி தே.மு.தி.க., அன்னதானம் வழங்கல்
/
விஜயகாந்த் நினைவு நாளை ஒட்டி தே.மு.தி.க., அன்னதானம் வழங்கல்
விஜயகாந்த் நினைவு நாளை ஒட்டி தே.மு.தி.க., அன்னதானம் வழங்கல்
விஜயகாந்த் நினைவு நாளை ஒட்டி தே.மு.தி.க., அன்னதானம் வழங்கல்
ADDED : டிச 29, 2025 09:51 AM
சேலம்: தே.மு.தி.க., நிறுவனர் விஜயகாந்த் நினைவு நாளை, அக்கட்சியினர் குரு பூஜையாக அனுசரிக்கின்றனர். அதன்படி சேலம் மாநகர் மாவட்டம் சார்பில், 2ம் ஆண்டு நினைவு குருபூஜை நிகழ்ச்சி, கருப்பூர் சுங்கச்சாவடி அருகே நேற்று நடந்தது. ஓமலுார் தெற்கு ஒன்றிய செயலர் செல்வநேசன் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட செயலர் ராதாகிருஷ்ணன், விஜயகாந்த் படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஒன்றிய அவைத்தலைவர் ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அம்மாபேட்டை பகுதி சார்பில், அங்குள்ள வளைவு அருகே, சேலம் மாநகர் மாவட்ட துணை செயலர் சீனிவாசன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், பகுதி செயலர் செல்வகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து மக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. மாநகர் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அயோத்தியாப்பட்டணத்தில் தெற்கு ஒன்றிய செயலர் வெங்கடேசன் தலைமையில், விஜயகாந்த் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, அப்பகுதி மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆத்துார், ராணிப்பேட்டையில், சேலம் கிழக்கு மாவட்ட துணைச் செயலர் சந்திரன் தலைமையில் கட்சியினர், விஜயகாந்த் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல், ஆத்துார் அரசு போக்குவரத்து கழக கிளை பணிமனை, தலைவாசல், வீரகனுார், கெங்கவல்லி, தம்மம்பட்டி, நரசிங்க புரம் உள்ளிட்ட பகுதிகளில், விஜயகாந்த் படத்துக்கு மாலை அணிவித்து, அன்னதானம் வழங்கினர்.

