/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பட்டப்பகலில் கணவர் கடத்தல்: மனைவி புகாரால் விசாரணை
/
பட்டப்பகலில் கணவர் கடத்தல்: மனைவி புகாரால் விசாரணை
பட்டப்பகலில் கணவர் கடத்தல்: மனைவி புகாரால் விசாரணை
பட்டப்பகலில் கணவர் கடத்தல்: மனைவி புகாரால் விசாரணை
ADDED : டிச 29, 2025 09:50 AM
சேலம்: பட்டப்பகலில் மொபட்டில் சென்று கொண்டிருந்த கணவரை, காரில் வந்த கும்பல் கடத்திச்சென்றதாக, அவரது மனைவி புகார்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.
சேலம், சூரமங்கலம், புது ரோட்டை சேர்ந்தவர் சீனிவாசன், 32. இவரது மனைவி கோமதி, இரும்பாலை போலீஸ் ஸ்டேஷனில் நேற்று அளித்த புகார் மனு: என் கணவர் சீனிவாசன், 32. இவரது தந்தை கோவிந்தராஜ், 2021ல் இறந்துவிட்டார். இவரது பெயரில், இனாம்வேடுகாத்தாம்பட்டியில், 59 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்தை பிரித்து கொடுக்கும்படி, கணவரிடம் அவரது சகோதரிகள் கேட்டு வந்தனர்.
இதனிடையே இளம்பிள்ளையை சேர்ந்த ஒருவர், கணவரிடம் குறிப்பிட்ட தொகையை கொடுத்து, அந்த நிலத்தை, அவரது பெயருக்கு எழுதிக்கொடுக்கும்படி கேட்டார். சீனிவாசன், மறுத்தார். இதில் அவர்கள் இடையே பிரச்னை இருந்தது. இந்நிலையில் சூரமங்கலத்தில் இருந்து சீனிவாசன், அவரது மொபட்டில் வேடுகாத்தாம்பட்டிக்கு டிச., 28(நேற்று) மதியம் சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த சிலர், மொபட்டை வழிமறித்து சீனிவாசனை கடத்தி சென்றனர். தொடர்ந்து இளம்பிள்ளையில் ஒரு வீட்டில் அடைத்து வைத்து, அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
அவர், இதுகுறித்து என்னிடம் தகவல் தெரிவித்தார். அவரை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார். இதனால் போலீசார், சீனிவாசனை கடத்தியது யார், எதற்காக கடத்தினர் என விசாரிக்கின்றனர்.

