/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தி.மு.க., பொய் பிரசாரத்தை நம்பாதீர்!; சேலம் அ.தி.மு.க., வேட்பாளர் பேச்சு

ADDED : ஏப் 17, 2024 12:42 PM
ஓமலுார்: சேலம் லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் விக்னேஷ், சீலநாயக்கன்பட்டியில் உள்ள, 59, 60வது வார்டு பகுதிகளில் நேற்று, இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தார். அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.
அவர்கள் மத்தியில், விக்னேஷ் பேசியதாவது: உங்கள் வீட்டு பிள்ளையாக நினைத்து ஒரு வாய்ப்பு கொடுங்கள். உங்கள் பகுதி வளர்ச்சிக்கும், சேலம் மாவட்ட வளர்ச்சிக்கும் பாடுபடுவேன். மத்திய அரசு நிதியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் நம் தொகுதியில் முழுமையாக செயல்படுத்துவேன்.
தொகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவேன். படித்த இளைஞர்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும், மானிய நிதி உதவிகள் மூலம் இளைஞர்கள், பெண்களை தொழில்முனைவோராக வளர்ச்சி பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க.,வின் பொய் பிரசாரங்களை நம்ப வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, 60வது வார்டில் முதியோர்கள் காலில் விழுந்து விக்னேஷ் ஓட்டு சேகரித்தார். இதில் கொண்டலாம்பட்டி மண்டல குழு முன்னாள் தலைவர் சண்முகம், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.