/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மண் கடத்தலை தடுக்க முயன்றவரை தாக்கிய தி.மு.க., நிர்வாகி கைது
/
மண் கடத்தலை தடுக்க முயன்றவரை தாக்கிய தி.மு.க., நிர்வாகி கைது
மண் கடத்தலை தடுக்க முயன்றவரை தாக்கிய தி.மு.க., நிர்வாகி கைது
மண் கடத்தலை தடுக்க முயன்றவரை தாக்கிய தி.மு.க., நிர்வாகி கைது
ADDED : ஆக 21, 2025 02:29 AM
பெ.நா.பாளையம், மண் கடத்தலை தடுக்க முயன்ற, இந்து முன்னணி நிர்வாகியை தாக்கிய, தி.மு.க., நிர்வாகியை, போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவில் அருகே, டவுன் பஞ்சாயத்துக்கு சொந்தமான இடத்தில் இருந்து, கடந்த ஜூலை, 12ல், பொக்லைன், டிப்பர் லாரி மூலம் மண் கடத்தி, அதே பகுதியில் உள்ள தனியார் நபருக்கு சொந்தமான இடத்தில் குவிக்கப்பட்டது.
இதனால் ஏத்தாப்பூரை சேர்ந்த, இந்து முன்னணி, சேலம் கிழக்கு மாவட்ட செயலர் பிரசாந்த், 35, வாகனங்களை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அதே பகுதியை சேர்ந்த, தி.மு.க.,வின், பெத்தநாயக்கன்பாளையம் மத்திய ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மணிகண்டன், 36, பிரசாந்த் கன்னத்தில் தாக்கினார். படுகாயம் அடைந்த பிரசாந்தை, மக்கள் மீட்டு, பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து வருவாய்த்துறையினர், ஏத்தாப்பூர் போலீசார், அப்பகுதிக்கு சென்று விசாரித்தனர்.
இந்நிலையில் மண் கடத்தியதோடு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பிரசாந்தும், மண் கடத்தியவர்கள் மீதும் அதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மீதும் நடவடிக்கை கோரி, ஏத்தாப்பூர் வி.ஏ.ஓ., ஆனந்த்குமாரும் புகார் அளித்தனர். அதேநேரம் ஜாதி பெயரை சொல்லி பிரசாந்த் திட்டியதாக, மணிகண்டன் புகார் அளித்தனர்.
ஏத்தாப்பூர் போலீசார், வழக்குப்பதிவு செய்ய காலம் தாழ்த்தினார். இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து ஆபாசமாக திட்டுதல், காயம் ஏற்படுத்தும்படி தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில், ஜூலை, 17ல் மணிகண்டன் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர். தொடர்ந்து நேற்று காலை, அவரை கைது செய்து, வாழப்பாடி ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். பின், 'எந்த நேரத்தில் விசாரணைக்கு அழைத்தாலும் ஆஜராக வேண்டும்' எனும் நிபந்தனை அடிப்படையில், போலீசார் ஜாமினில் விடுவித்தனர்.

