/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
லாரி டிரைவரை கொன்ற தி.மு.க., நிர்வாகி கைது
/
லாரி டிரைவரை கொன்ற தி.மு.க., நிர்வாகி கைது
ADDED : அக் 25, 2024 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லாரி டிரைவரை கொன்ற
தி.மு.க., நிர்வாகி கைது
ஆத்துார், அக். 25-
ஆத்துார் அருகே ராமநாயக்கன்பாளையம் ஊராட்சி கொசவன்காட்டை சேர்ந்தவர் சுப்ர
மணியன், 45; தி.மு.க., கிளை செயலர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த, லாரி டிரைவர் முருகன், 24, இடையே, விவசாய நிலத்தின் பொது வழித்தட பிரச்னையில் முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் சுப்ரமணியன், அரிவாளால் முருகனை வெட்டி கொலை செய்தார். பின் சுப்ரமணியன், ஆத்துார் அரசு மருத்துவமனையில் நெஞ்சு வலிப்பதாக சேர்ந்தார். அங்கு போலீசார் வருவதை பார்த்து தப்பி ஓடிவிட்டார். ஆனால் அவரை, காமராஜர் சாலையில் போலீசார் சுற்றிவளைத்தனர். தொடர்ந்து நேற்று அவரை, போலீசார் கைது செய்தனர்.

