/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கர்ப்பிணி கடத்தல் வழக்கு தி.மு.க., நிர்வாகி கைது
/
கர்ப்பிணி கடத்தல் வழக்கு தி.மு.க., நிர்வாகி கைது
ADDED : ஜன 26, 2025 08:19 AM
இடைப்பாடி :   கர்ப்பிணியை கடத்திய வழக்கில், கூலிப்படை தலைவராக செயல்பட்டதாக சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே சின்னதாண்டவனுாரை சேர்ந்தவர் தனிஷ்கண்டன். தர்மபுரி மாவட்டம், சின்னம்பள்ளியை சேர்ந்தவர் ரோஷினி. வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் காதல் திருமணம் செய்தனர்.
ரோஷினி ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், அவரது குடும்பத்தினர், கூலிப்படையை வைத்து, கடந்த, 23ல் அவரை கணவர் வீட்டில் இருந்து கடத்தினர். தனிஷ்கண்டன் புகார்படி, இடைப்பாடி போலீசார், ரோஷினியை மீட்டனர்.
பெண்ணின் பெற்றோர், அக்கா, பெரியப்பா உட்பட ஆறு பேரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய கூலிப்படைக்கு தலைவராக செயல்பட்டதாக, சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க., விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலரான, மேச்சேரி, திப்பரத்தாம்பட்டியைச் சேர்ந்த பிரபு, 40, என்பவரை, நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடுகின்றர்.

