/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கர்ப்பிணி கடத்தல் வழக்கு கூலிப்படை தலைவரான தி.மு.க., நிர்வாகி கைது
/
கர்ப்பிணி கடத்தல் வழக்கு கூலிப்படை தலைவரான தி.மு.க., நிர்வாகி கைது
கர்ப்பிணி கடத்தல் வழக்கு கூலிப்படை தலைவரான தி.மு.க., நிர்வாகி கைது
கர்ப்பிணி கடத்தல் வழக்கு கூலிப்படை தலைவரான தி.மு.க., நிர்வாகி கைது
ADDED : ஜன 26, 2025 03:50 AM
இடைப்பாடி: கர்ப்பிணியை கடத்திய வழக்கில், கூலிப்படை தலைவராக செயல்பட்டதாக, சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகியை, போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே சின்னதாண்டவனுாரை சேர்ந்தவர் தனிஷ்கண்டன். தர்மபுரி மாவட்டம் சின்னம்பள்-ளியை சேர்ந்தவர் ரோஷினி.
இருவரும் காதலித்த நிலையில், வெவ்வேறு
சமூகத்தினர் என்பதால், பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரி-வித்தனர்.
அதை மீறி, இருவரும் கடந்த ஆண்டு ஜூலையில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், 5 மாத கர்ப்பிணியாக இருந்த ரோஷினியை, அவரது குடும்பத்தினர், கூலிப் படையை வைத்து, கடந்த, 23ல் கடத்தினர்.
இதுகுறித்து தனிஷ்கண்டன் புகார்படி, இடைப்பாடி போலீசார், ரோஷினியை மீட்டனர். தொடர்ந்து அப்பெண்ணின் பெற்றோர், அக்கா, பெரியப்பா உள்பட, 6 பேரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.
கடத்திய கூலிப் படைக்கு தலைவராக செயல்பட்டதாக, சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க., விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலரான, மேச்சேரி, திப்பரத்தாம்பட்டியை சேர்ந்த பிரபு, 40, என்பவரை, நேற்று போலீசார் கைது செய்தனர்.
மேலும் கூலிப்படையினரை, போலீசார் தேடுகின்றனர்.