/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முன்னோடிகள் நினைவாக தி.மு.க., கொடியேற்று விழா
/
முன்னோடிகள் நினைவாக தி.மு.க., கொடியேற்று விழா
ADDED : ஜன 18, 2025 02:26 AM
சேலம்: தி.மு.க., பவள விழா ஆண்டையொட்டி, சேலம் மாநகராட்சி, 42வது வார்டில், 'மிசா' மாரியப்பன், 'மொழிப்போர் தியாகி' ராம-லிங்கம் நினைவு கொடி கம்பத்தில், கட்சி கொடியேற்று விழா நேற்று நடந்தது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், கட்சி கொடி ஏற்றி பேசியதாவது:
மாரியப்பன், ராமலிங்கம், நெருக்கடி காலத்தில் கருணாநிதிக்கு துணை நின்று, கொள்கை பிடிப்போடு பணியாற்றிவர்கள். அவர்-களின் கொள்கை பிடிப்பு, மொழிப்பற்று, நமக்கு வழிகாட்டி. முதல்வர் ஸ்டாலின், 25 ஆண்டுகளாக ஒவ்வொரு மாவட்டத்-திலும், மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி வருகிறார். இதை பின்பற்றி துணை முதல்வர் உதயநிதியும், கட்சிக்கு உழைத்தவர்களை கவுரவப்படுத்தி வருகிறார்.இவ்வாறு அவர் பேசினார்.
மாநகர துணை செயலர் கணேசன், தேர்தல் பணிக்குழு செயலர் தாமரைக்கண்ணன், செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.