/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தி.மு.க.,வில் தொகுதி வாரியாக பூத் டிஜிட்டல் ஏஜன்ட் கூட்டம்
/
தி.மு.க.,வில் தொகுதி வாரியாக பூத் டிஜிட்டல் ஏஜன்ட் கூட்டம்
தி.மு.க.,வில் தொகுதி வாரியாக பூத் டிஜிட்டல் ஏஜன்ட் கூட்டம்
தி.மு.க.,வில் தொகுதி வாரியாக பூத் டிஜிட்டல் ஏஜன்ட் கூட்டம்
ADDED : ஜூன் 27, 2025 01:48 AM
சேலம், சேலம் எம்.பி., செல்வகணபதி அறிக்கை:
தி.மு.க.,வின், சேலம் மேற்கு மாவட்டத்தில், ஓட்டுச்சாவடி வாரியாக பூத் டிஜிட்டல் ஏஜன்ட், பாகநிலை முகவர்கள், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் பயிற்சி பாசறை கூட்டம், வரும், 29ல் நடக்க உள்ளது. மேற்கு மாவட்ட செயலர் செல்வகணபதி தலைமை வகிப்பார். தொகுதி பார்வையாளர்களான, இடைப்பாடி முருகவேல், சங்ககிரி செந்தில்குமார், மேட்டூர் ரியா முன்னிலை வகிப்பர்.
அதன்படி, 29 அன்று, இடைப்பாடி தொகுதிக்குட்ட பகுதிகளுக்கு, நைனாம்பட்டியில் உள்ள நடராஜன் மஹாலில் நடக்க உள்ளது. அதேபோல் சங்ககிரி தொகுதிக்குட்ட பகுதிகளுக்கு, குப்பனுார் ஆர்.கே.எஸ்., மஹால்; மேட்டூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு, மேட்டூர் ஆர்.எஸ்., கருமலைக்கூடல் ஜே.கே.பி., மஹாலில் நடக்க உள்ளது. மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர், கிளை, வார்டு செயலர்கள், அனைத்து சார்பு அணி நிர்வாகிகள், பாகநிலை முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், பூத் டிஜிட்டல் ஏஜன்ட்
ஆகியோர் தவறாமல் பங்கேற்க வேண்டும்.