/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தி.மு.க., சேலம் கிழக்கு மாவட்ட தொகுதிகளில் ஆலோசனை கூட்டம்
/
தி.மு.க., சேலம் கிழக்கு மாவட்ட தொகுதிகளில் ஆலோசனை கூட்டம்
தி.மு.க., சேலம் கிழக்கு மாவட்ட தொகுதிகளில் ஆலோசனை கூட்டம்
தி.மு.க., சேலம் கிழக்கு மாவட்ட தொகுதிகளில் ஆலோசனை கூட்டம்
ADDED : அக் 30, 2025 02:27 AM
வாழப்பாடி, தி.மு.க.,வின் சேலம் கிழக்கு மாவட்டத்தில் உள்ள, 4 சட்டசபை தொகுதிகளில் ஆலோசனை கூட்டம், இன்று, நாளை, நவ., 1 ஆகிய நாட்களில் நடக்கிறது.
இதுகுறித்து, சேலம் கிழக்கு மாவட்ட செயலரான, ராஜ்யசபா எம்.பி., சிவலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆத்துார் சட்டசபை தொகுதிக்கு, தொகுதி ஒருங்கிணைப்பாளர், பாக முகவர், பூத் டிஜிட்டல் ஏஜன்ட், பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம், அக்., 30(இன்று) காலை, 9:00 மணிக்கு, துளுவ வேளாளர் திருமண மண்டபத்தில்
நடக்கிறது.
அதே நாளில் கெங்கவல்லி தொகுதிக்கு, தலைவாசல் குமாரசாமி கவுண்டர் நல்லம்மாள் திருமண மஹாலில், மதியம், 2:00 மணிக்கு, கூட்டம் நடக்கிறது.
அக்., 31(நாளை) காலை, 10:00 மணிக்கு, ஏற்காடு தொகுதிக்கு, வாழப்பாடியில் உள்ள ஸ்டாலின் அறிவாலயத்திலும், நவ., 1 காலை, 10:00 மணிக்கு, வீரபாண்டி தொகுதிக்கு, நெய்க்காரப்பட்டியில் உள்ள கிருஷ்ண மஹாலிலும் நடக்க உள்ளது.
மாவட்ட செயலர் சிவலிங்கம் தலைமை வகிப்பார். லோக்சபா
எம்.பி.,க்கள் செல்வகணபதி, மலையரசன், தொகுதி பார்வையாளர்கள் ஆனந்த், கணேஷ் குமார், ஆனந்தகுமார் முன்னிலை வகிப்பர்.
இக்கூட்டத்துக்கு மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர், கிளை செயலர்கள், தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், பாக முகவர்கள், பூத் டிஜிட்டல் ஏஜன்ட், பூத் கமிட்டி உறுப்பினர்கள், கட்சி முன்னோடிகள் தவறாமல் பங்கேற்க கேட்டுக்கொள்கிறேன்.

