/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தி.மு.க., இளைஞரணி மாநாடு எதிரொலி: போக்குவரத்தை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டதால் 4 கி.மீ., தூரத்திற்கு அணிவகுத்து நின்ற சரக்கு லாரிகள்

ADDED : ஜன 22, 2024 11:34 AM
அரூர்: சேலத்தில், தி.மு.க., இளைஞரணி மாநாடால், சரக்கு லாரிகள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டதால், அரூரில், 4 கி.மீ., துாரத்திற்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் நேற்று, தி.மு.க., இளைஞரணியின், 2வது மாநில மாநாடு நடந்தது. இந்நிலையில், வேலுார், சென்னை மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து, அரூர் வழியாக, சேலம், நாமக்கல், கரூர், கோவை, மதுரை, துாத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு சென்ற சரக்கு லாரிகள் மற்றும் கனரக வாகனங்களை, அரூரில் தடுத்து நிறுத்திய போலீசார், மாற்றுப்பாதையில் செல்லக்கூறினர். ஆனால், கூடுதல் டீசல் செலவு, டோல்கேட் கட்டணத்தால் லாரிகளை தர்மபுரி மற்றும் திருப்பத்துார் சாலையோரத்தில் நிறுத்திவிட்டு ஓட்டுனர்கள் காத்துக் கிடந்தனர்.
இது குறித்து, லாரி ஓட்டுனர்கள் கூறியதாவது:
நாங்கள் வழக்கமாக, அரூர் வழியாக தான் செல்வோம். தி.மு.க., இளைஞரணி மாநாடால், நேற்று முன்தினம் காலை, 9:00 மணி முதலே, போலீசார் வாகனங்களை நிறுத்தி, மாற்றுப்பாதையில் செல்லக்கூறினர். அரூரிலிருந்து சேலத்திற்கு, 60 கி.மீ., துாரம் தான். ஆனால், மாற்றுப்பாதையில், 110 கி.மீ., துாரம் செல்ல வேண்டும். இதனால், டீசல் செலவு கூடுதலாவதுடன், 2 இடங்களில் டோல்கேட்டில் பணம் செலுத்த வேண்டும். தற்போது, உணவுக்கும் சிரமமாக உள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
ஓட்டுனர்கள் வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தியதால், தர்மபுரி சாலையில், 4 கி.மீ., துாரத்திற்கு ஆயிரக்
கணக்கான லாரிகள் அணிவகுத்து நின்றன. இதேபோல், திருப்பத்துார் சாலையிலும் லாரிகள்
அணிவகுத்து நின்றன.