/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஒப்பந்த பணிக்கு கமிஷன் வாங்கும் தி.மு.க.,வினர் ; அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் மா.செ., குற்றச்சாட்டு

ADDED : ஜன 10, 2025 07:14 AM
மேட்டூர்: மேட்டூர் நகராட்சி நிர்வாகத்தில் நீடிக்கும் அவலங்களுக்கு கண்டனம் தெரிவித்து, மேட்டூர் நகர அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ராஜ்யசபா எம்.பி., சந்திரசேகரன் தொடங்கி வைத்தார்.
முன்னாள் அமைச்சர் மோகன், தலைமை வகித்து பேசுகையில், ''தமிழகம் சிறந்த மாநிலமாக உருவாக, வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற வேண்டும்,'' என்றார்.
சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசியதாவது: ஒரு நகராட்சி நிர்வாகம் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு மேட்டூர். இங்கு போதிய அளவில் சாலை வசதி இல்லை. தி.மு.க.,வினர் ஒப்பந்த பணிகளுக்கு, 30 சதவீதம் கமிஷன் பெறுவதாக, ஒப்பந்ததாரர்கள் குற்றம்சாட்டுகின்றனர். பின் எப்படி நகராட்சி பணியில் தரத்தை எதிர்பார்க்க முடியும். முன்னதாக சொத்துவரி செலுத்துவோருக்கு நகராட்சி தள்ளுபடி வழங்குகிறது. சொத்து வரியை அரசு விருப்பத்துக்கு ஏற்ப அதிகரிக்கிறது. வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்று, பொதுச்செயலர், இ.பி.எஸ்., முதல்வராவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.
'யார் அந்த சார்'
இதில் மாவட்ட மகளிர் அணி செயலர் லலிதா, மேட்டூர், கொளத்துார், மேச்சேரி ஒன்றிய, டவுன் பஞ்சாயத்து நிர்வாகிகள், கட்சியினர் பங்கேற்றனர். இவர்களில் பலரும், 'அண்ணா பல்கலை மாணவி பலாத்காரம் தொடர்பான விவகாரத்தை முன்னிறுத்தி, 'யார் அந்த சார்' என்ற பேட்ஜை, சட்டையில் அணிந்திருந்தனர்.