/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
எஸ்.ஐ.ஆர்., பணிகளில் தி.மு.க.,வினர் ஏமாந்துவிடக் கூடாது: அமைச்சர் வேலு
/
எஸ்.ஐ.ஆர்., பணிகளில் தி.மு.க.,வினர் ஏமாந்துவிடக் கூடாது: அமைச்சர் வேலு
எஸ்.ஐ.ஆர்., பணிகளில் தி.மு.க.,வினர் ஏமாந்துவிடக் கூடாது: அமைச்சர் வேலு
எஸ்.ஐ.ஆர்., பணிகளில் தி.மு.க.,வினர் ஏமாந்துவிடக் கூடாது: அமைச்சர் வேலு
ADDED : நவ 25, 2025 02:06 AM
ஆத்துார், ''எஸ்.ஐ.ஆர்., பணிகளில், தி.மு.க.,வினர் ஏமாந்துவிடக் கூடாது,'' என, ஆத்துாரில் நடந்த, தி.மு.க., தேர்தல் பணிக்குழு கூட்டத்தில், அமைச்சர் வேலு பேசினார்.
சேலம் மாவட்டம், ஆத்துாரில், ஆத்துார் மற்றும் கெங்கவல்லி சட்டசபை தொகுதிக்கான தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. தி.மு.க., மண்டல பொறுப்பாளரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான வேலு பேசியதாவது:
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகளில், தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த, எஸ்.ஐ.ஆர்., பணிகளில், தி.மு.க.,வினர் ஏமாந்து விடக்கூடாது; கவனமாக வாக்காளர் திருத்தம், நீக்கல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். வாக்காளர்களின் ஓட்டுகளை தவறவிட்டு விட வேண்டாம். இந்த தேர்தலில், தி.மு.க.,வினர் மிக கவனமாக ஈடுபட வேண்டும்.
தி.மு.க., சார்பில் நியமித்துள்ள ஓட்டுச்சாவடி முகவர்கள், பாக குழு முகவர்கள் மற்றும் டிஜிட்டல் முகவர்கள், தேர்தல் அலுவலர்களுடன் நேரில் சென்று, பணிகளை கண்காணித்தல், தவறு மற்றும் குறைகள் இருந்தால் சுட்டிக்காட்ட வேண்டும். எஸ்.ஐ.ஆர்., பணிகளுக்காக மாநகர், நகர், ஒன்றியம் மற்றும் பேரூர்களில் தலா ஒரு பொறுப்பாளரும், தொகுதிக்கு, 19 ஒருங்கிணைப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், திருத்தம் பணிகள் மேற்கொண்ட விபரங்கள், மொத்த ஓட்டு, தற்போது வரை சரிபார்த்த விபரம் மற்றும் எத்தனை சதவீதம் பணிகள் முடிந்துள்ளது என்ற விபரங்களை, சட்டசபை வாரியாக அவ்வப்போது கட்சி தலைமைக்கு தகவல் அனுப்பி வைக்க வேண்டும். சிலர் பணிகளை சரிவர மேற்கொள்ளாமல் இருந்தால், விரைவாக மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
அமைச்சர் ராஜேந்திரன், எம்.பி.,க்கள் சிவலிங்கம், செல்வகணபதி, மலையரசன், மாவட்ட பொருளாளர் ஸ்ரீராம், மாவட்ட துணை செயலர்கள் சுரேஷ்குமார், சின்னதுரை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்ததும் பங்கேற்ற நிர்வாகிகளுக்கு, அதே மண்டபத்தில் சிக்கன், மட்டன் என, அசைவ விருந்து வழங்கப்பட்டது.

