/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலத்தில் கிங் பேலஸ் அபார்ட்மென்ட் கட்டுமான பணிக்கான பூமி பூஜை
/
சேலத்தில் கிங் பேலஸ் அபார்ட்மென்ட் கட்டுமான பணிக்கான பூமி பூஜை
சேலத்தில் கிங் பேலஸ் அபார்ட்மென்ட் கட்டுமான பணிக்கான பூமி பூஜை
சேலத்தில் கிங் பேலஸ் அபார்ட்மென்ட் கட்டுமான பணிக்கான பூமி பூஜை
ADDED : நவ 25, 2025 02:06 AM
சேலம், சேலம் குமாரசாமிபட்டி, ஜெயராம் பள்ளி அருகே, விஜயஸ்ரீ கன்ஸ்ட்ரக்சன் சார்பில், புதிதாக கிங் பேலஸ் அபார்ட்மென்ட் கட்டுமான பூமி பூஜை, கோலாகலமாக நேற்று நடந்தது.
இதில், சேலத்தை சேர்ந்த தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், கனரா வங்கி, இந்தியன் வங்கி, சவுத் இந்தியன் வங்கி, பாரத ஸ்டேட் பாங்க், ெஹச்டிஎப்சி., ஐசிஐசி வங்கி, யூகோ வங்கி உள்ளிட்ட உயரதிகாரிகள், மேலாளர்கள், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.
கிங் பேலஸ் அபார்ட்மென்ட் சிறப்பு அம்சங்கள் குறித்து, விஜயஸ்ரீ கன்ஸ்ட்ரக்சன் நிர்வாக இயக்குனர்கள் ராஜேந்திரன், பாலசுப்ரமணியம் ஆகியோர் கூறியதாவது: சேலம் சுற்றுவட்டார பகுதிகளில், விஜயஸ்ரீ கன்ஸ்ட்ரக்சனின் எண்ணற்ற அபார்ட்மென்ட்கள் உள்ளன. அதேபோல், சேலம் குமாரசாமிபட்டியில், மாநகரின் முக்கிய கல்லுாரி, பள்ளிகளுக்கு அருகில் யாரும் தர முடியாத தரம், விலையில், இப்போது புதிதாக கிங் பேலஸ் அபார்ட்மென்ட் உதயமாகிறது. இந்த அபார்ட்மென்ட்டில் வீடு வாங்க விரும்புவோருக்கு, அதிநவீன வசதிகள் செய்து தரப்படும். குறிப்பாக, இங்கு ஈவி சார்ஜிங் பாயின்ட், ஜிம், சீனியர் சிட்டிசன்களுக்கான நடைபயிற்சி களம், சினிமா தியேட்டர், நீச்சல்குளம், 24 மணிநேர குடிநீர் வசதி, 24 மணிநேர சிசிடிவி கேமரா, ஜெனரேட்டர் வசதி, யோகா பயிற்சி மையம், குழந்தைகள் பூங்கா மற்றும் தீயணைப்பு நிலையம்போன்ற எண்ணிலடங்கா வசதிகள் இடம் பெறுகின்றன. மேலும் முன்னணி வங்கிகளின் வீட்டுக்கடன் வசதி ஏற்பாடு செய்து தரப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பூமிபூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

