/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அமித்ஷாவை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
அமித்ஷாவை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 20, 2024 01:05 AM
சேலம், டிச. 20-
லோக்சபாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கரை அவமதித்து பேசியதாக கூறி, தி.மு.க. சார்பில் சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சேலம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் மாநகர் பகுதிகளில் ஆறு இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அஸ்தம்பட்டி, அழகாபுரம் பகுதி சார்பில் காந்தி
ரோடு வருமான வரித்துறை அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மத்திய மாவட்ட பொருளாளர் வக்கீல் கார்த்திகேயன் தலைமை வகித்தார். மேயர் ராமசந்திரன், மாநகர செயலர் ரகுபதி, ஆதி திராவிடர் நலக்குழு அமைப்பாளர் அழகாபுரம் முரளி, தலைவர் தேவதாஸ், கவுன்சிலர்கள் சங்கீதா நீதிவர்மன் உள்பட பலர் பங்கேற்று, அமித்ஷாவை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
இதே போல தாதகாப்பட்டி, குகை, கொண்டலாம்பட்டி, குமாரசாமிப்பட்டி, செவ்வாய்பேட்டை, பொன்னம்மாபேட்டை, அரிசிபாளையம், அம்மாபேட்டை, கிச்சிப்பாளையம், சூரமங்கலம், மெய்யனுார் ஆகிய இடங்களில் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.