/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வரும் 8 முதல் 11 வரை தி.மு.க., பொதுக்கூட்டம்
/
வரும் 8 முதல் 11 வரை தி.மு.க., பொதுக்கூட்டம்
ADDED : மார் 05, 2025 07:47 AM
சேலம்: தி.மு.க.,வின் சேலம் மத்திய மாவட்ட செயலர், அமைச்சர் ராஜேந்திரன் அறிக்கை:மாவட்ட இளைஞரணி சார்பில், சட்டசபை தொகுதி வாரியாக மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. அதன்படி வரும், 8ல், சேலம் வடக்கு தொகுதி சார்பில், கோரிமேட்டில் நடக்க உள்ள கூட்டத்தில் பரந்தாமன், யோகஸ்ரீ பேசுவர்.
9ல், சேலம் தெற்கு, கொண்டலாம்பட்டியில் சரவணன், சூரியபிரகாஷ்; 10ல் சேலம் மேற்கு தொகுதி கோட்டகவுண்டம்பட்டியில், சிவஜெயராஜ், சரண்யா; 11ல் ஓமலுார் தொகுதி, கே.மோரூரில், சவுமியன், வைத்தியநாதன், அஜித்குமார் பேச உள்ளனர். அதனால் மாவட்ட, மாநகர், பகுதி வட்ட, ஒன்றிய கிளை, பேரூர், வார்டு பொறுப்பாளர்கள், இளைஞரணி உள்பட அனைத்து அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் பங்கேற்க வேண்டும். அதில் முதல்வர் பிறந்தநாள் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.