/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
18ல் தி.மு.க., சட்டத்துறை மாநாடு500 வக்கீல்கள் பங்கேற்க ஏற்பாடு
/
18ல் தி.மு.க., சட்டத்துறை மாநாடு500 வக்கீல்கள் பங்கேற்க ஏற்பாடு
18ல் தி.மு.க., சட்டத்துறை மாநாடு500 வக்கீல்கள் பங்கேற்க ஏற்பாடு
18ல் தி.மு.க., சட்டத்துறை மாநாடு500 வக்கீல்கள் பங்கேற்க ஏற்பாடு
ADDED : ஜன 05, 2025 01:18 AM
சேலம் சென்னையில் வரும், 18ல், தி.மு.க., சட்டத் துறையின், 3வது மாநில மாநாடு நடக்க உள்ளது. இதுகுறித்து ஆலோசனை கூட்டம், சேலத்தில் உள்ள தி.மு.க., அலுவலகத்தில் நேற்று நடந்தது. சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமை வகித்து பேசுகையில், ''சேலம் ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில், 500 வக்கீல்கள் பங்கேற்க அனைவரும் செல்வதற்கான ஏற்பாடு செய்து தரப்படும்,'' என்றார்.
முன்னாள்  எம்.எல்.ஏ., வான, சட்டத்துறை இணை செயலர் ரவிச்சந்திரன் பேசுகையில், ''சென்னையில் நடக்க உள்ள, 3வது மாநில மாநாட்டில், 5,000 பேர் பங்கேற்க உள்ளனர்.
இதில் மூத்த வக்கீல்கள் கபில் சிபில், இந்து என்.ராம் உள்ளிட்டோர் பேச உள்ளனர். முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றுவார். தி.மு.க., வக்கீல்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்,'' என்றார்.
சேலம் எம்.பி., செல்வகணபதி, தி.மு.க.,வின் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.