/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஓட்டு சேகரிக்க வந்த தி.மு.க.,வினரை கிராமத்துக்குள் விடாமல் விரட்டிய மக்கள்

ADDED : ஏப் 10, 2024 06:51 AM
ஏற்காடு : ஏற்காடு, சொனப்பாடி கிராமத்தில், 150 குடும்பங்களில், 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். கொண்டையனுாரில் இருந்து, சொனப்பாடிக்கு செல்ல, 2 கி.மீ., மண் சாலை உள்ளது. அச்சாலை சேதமாகி, இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது.
இதனால் தார்ச்சாலையாக மாற்றி தரக்கோரி, அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்களிடம் மக்கள் பலமுறை மனு வழங்கியும் நடவடிக்கை இல்லை. இதனால் கடந்த, 4ல், மக்கள், லோக்சபா தேர்தலை புறக்கணிக்க போவதாக, கறுப்பு கொடி கட்டியும், பேனர்கள் வைத்தும் எதிர்ப்பை தெரிவித்தனர். அப்போது, துணை பி.டி.ஓ., லோகநாதன், வருவாய் ஆய்வாளர் மனோகரன் பேச்சு நடத்தி சமாதானப்படுத்தினர்.
இந்நிலையில் நேற்று இரவு, 7:00 மணிக்கு, வேலுார் பகுதியை சேர்ந்த சின்னசாமி உள்ளிட்ட தி.மு.க.,வினர், சொனப்பாடிக்கு பிரசாரத்துக்கு சென்றனர். அப்போது கிராம மக்கள், சாலையில் கற்களை போட்டு மறித்து, 'ஓட்டு கேட்டு யாரும் வரக்கூடாது' என கூறினர். மேலும் ஓட்டு கேட்டு வந்தவர்களிடம், வாக்குவாதம் செய்தனர்.
ஒரு மூதாட்டி, பிரசாரத்துக்கு வந்த வாகனம் முன் படுத்து தர்ணாவில் ஈடுபட்டார்.
மேலும் தி.மு.க.,வினரை கிராமத்துக்குள் விடாமல், 'தேர்தலில் யாருக்கும் ஓட்டு போட மாட்டோம்' என கூறி அவர்களை விரட்டிவிட்டனர்.