/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
2026ல் தி.மு.க., எதிர்க்கட்சியாக கூட இருக்காது'
/
2026ல் தி.மு.க., எதிர்க்கட்சியாக கூட இருக்காது'
ADDED : ஜூலை 19, 2025 01:10 AM
ஆத்துார், தி.மு.க., அரசை கண்டித்து, அ.தி.மு.க.,வின், சேலம் புறநகர் மாவட்டம் இளைஞர், இளம்பெண்கள் பாசறை சார்பில், ஆத்துாரில் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. பாசறை மாவட்ட செயலர் ராஜராஜசோழன் தலைமை வகித்தார்.
அதில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:
பா.ஜ.,வுடன் பயத்தில் கூட்டணி வைக்கவில்லை; இ.பி.எஸ்., பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. அவரது சுற்றுப்பயணத்தில், முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதாவை பார்ப்பது போல், லட்சக்கணக்கான மக்கள் வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் காமராஜர் குறித்து, தி.மு.க., - எம்.பி., சிவா தவறான கருத்து கூறியபோதும், ஸ்டாலின் கண்டிக்கவில்லை. காமராஜரின் உருவத்தையும், எம்.ஜி.ஆரையும் கருணாநிதி கேலி செய்த நிலையில், அவரது மகன் ஆட்சி எப்படி இருக்கும்? 4 ஆண்டுக்கு பின், மகளிர் உரிமைத்தொகைக்கு கணக்கு எடுத்து எந்த பயனும் இல்லை. தி.மு.க., ஆட்சிக்கு வந்தாலே, தமிழகத்துக்கு பல்வேறு சங்கடங்கள் ஏற்படும்; செயற்கை பஞ்சம், சட்டம், ஒழுங்கு பிரச்னை வரும். அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், ஊழல் செய்த அமைச்சர், அதிகாரிகள் சிறைக்கு செல்வர்.
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியுடன், பெரிய கட்சி வருவதாக, இ.பி.எஸ்., கூறிய பின், ஸ்டாலின் பயத்தில் பேசுகிறார். 10 சீட்டுக்கு மேல், தி.மு.க., வராது; அ.தி.மு.க., 220 சீட்டுகள் பெறும். 2011 போன்று, 2026ல், தி.மு.க., எதிர்க்கட்சியாக கூட இருக்காது. இவ்வாறு அவர் பேசினார்.
சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், பாசறை மாநில செயலர் பரமசிவம், எம்.எல்.ஏ.,க்கள் ஜெயசங்கரன், நல்லதம்பி உள்பட பலர்
பங்கேற்றனர்.