/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குஷ்பு படத்தை எரித்த தி.மு.க., மகளிர் அணி
/
குஷ்பு படத்தை எரித்த தி.மு.க., மகளிர் அணி
ADDED : மார் 17, 2024 02:17 PM
வாழப்பாடி: வாழப்பாடியில் உள்ள, தி.மு.க.,வின் சேலம் கிழக்கு மாவட்ட அலுவலகம் முன், கடலுார் நெடுஞ்சாலை அருகே, அக்கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம், நேற்று காலை நடந்தது. ஏற்காடு சட்டசபை தொகுதி மேற்பார்வையாளர் புஷ்பராஜ் தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் கருணாநிதி முன்னிலை வகித்தார்.
அதில் வரும் லோக்சபா தேர்தல் பணி, செயல்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஒன்றிய செயலர்கள் விஜயகுமார், ரத்தினவேல், சக்கரவர்த்தி, சிவராமன், மாது உள்பட பலர் பங்கேற்றனர். இதையடுத்து தி.மு.க., மகளிர் அணி நிர்வாகிகள், தமிழக அரசின் மகளிர் உரிமை தொகை குறித்து அவதுாறாக பேசிய, பா.ஜ., நிர்வாகி குஷ்பு படத்தை தீ வைத்து எரித்து கண்டன கோஷம் எழுப்பிவிட்டு கலைந்தனர்.

