/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தி.மு.க., இளைஞரணி 2வது மாநில மாநாடு 'ட்ரோன் ஷோ'வுடன் பிரமாண்ட தொடக்கம்
/
தி.மு.க., இளைஞரணி 2வது மாநில மாநாடு 'ட்ரோன் ஷோ'வுடன் பிரமாண்ட தொடக்கம்
தி.மு.க., இளைஞரணி 2வது மாநில மாநாடு 'ட்ரோன் ஷோ'வுடன் பிரமாண்ட தொடக்கம்
தி.மு.க., இளைஞரணி 2வது மாநில மாநாடு 'ட்ரோன் ஷோ'வுடன் பிரமாண்ட தொடக்கம்
ADDED : ஜன 21, 2024 12:07 PM
சேலம்: சேலத்தில் நேற்று, தி.மு.க., இளைஞரணி மாநாட்டு சுடரை முதல்வர் ஸ்டாலினிடம், அமைச்சர் உதயநிதி வழங்கினார்.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில், தி.மு.க., இளைஞரணி, 2வது மாநில மாநாடு இன்று நடக்கிறது. இதற்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் வந்த முதல்வர் ஸ்டாலின், மாநாட்டு திடலுக்கு நேற்று மாலை, மனைவி துர்காவுடன் வந்தார். அங்கு அமைச்சர் உதய நிதி வரவேற்பு அளித்தார். தொடர்ந்து, சென்னையில் சில நாட்களுக்கு முன் தொடங்கிய சுடரை, தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள், முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்தனர். தொடர்ந்து, 'நீட்' விலக்கு கோரி இளைஞர் அணி சார்பில் மேற்கொண்ட இருசக்கர வாகன பிரசாரத்தையும் பார்வையிட்டார்.
இதையடுத்து, 1,500 'ட்ரோன்'கள் மூலம், வானில் நிகழ்த்தப்பட்ட பிரமாண்ட, 'ட்ரோன் ஷோ'வை, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி, நேரு, முத்துசாமி, சுப்பிரமணியன், மகேஷ், தி.மு.க., பொருளாளர் பாலு உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் கண்டு ரசித்தனர்.
இதில், ஈ.வெ.ரா., உருவம், அண்ணாதுரை, கருணாநிதி, கொடியேந்திய ஸ்டாலின், தமிழ்நாடு பெயர், தமிழ் வெல்லும், மு.க., என்ற கருணாநிதியின் கையெழுத்து, உதயநிதி உருவம், தி.மு.க., இளைஞரணியின், 2வது மாநில மாநாட்டுக்கு அனைவரும் வருக என்ற எழுத்துக்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டன.
மாவட்ட செயலர்கள்
சிவலிங்கம், செல்வகணபதி, எம்.எல்.ஏ., ராஜேந்திரன், எம்.பி.,க்கள் சேலம் பார்த்திபன், கள்ளக்குறிச்சி கவுதம சிகாமணி, முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

