/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆக.,30 வரை ஆந்திரா, தெலுங்கானாவில் காலி லாரிகளை நிறுத்த வேண்டாம்'
/
ஆக.,30 வரை ஆந்திரா, தெலுங்கானாவில் காலி லாரிகளை நிறுத்த வேண்டாம்'
ஆக.,30 வரை ஆந்திரா, தெலுங்கானாவில் காலி லாரிகளை நிறுத்த வேண்டாம்'
ஆக.,30 வரை ஆந்திரா, தெலுங்கானாவில் காலி லாரிகளை நிறுத்த வேண்டாம்'
ADDED : ஆக 21, 2025 02:17 AM
சேலம், ''வரும் ஆக., 30 வரை ஆந்திரா, தெலுங்கானாவுக்கு சரக்கு ஏற்றிச்செல்லும் லாரிகள், லோடை இறக்கிவிட்டு காலி லாரிகளை, அங்கு நிறுத்த வேண்டாம்,'' என, மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் தன்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர், நேற்று கூறியதாவது: ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளுக்கு, தமிழகத்தில் இருந்து தினமும், 1,000 லாரிகள் வரை வாடகைக்கு இயக்கப்படுகின்றன. அங்கு சரக்குகளை இறக்கி விட்டு, காலியாக நிற்கும் லாரிகளை, அங்குள்ள சிலர், கடந்த ஆண்டு சதுர்த்தியின்போது சிலைகளை கரைக்க பயன்படுத்தினர்.
குறிப்பாக டிரைவர் மட்டும் உள்ளதால், அவர்களை மிரட்டி வாடகைக்கு பணம் தராமல் லாரிகளை எடுத்துச்சென்றனர். இது இந்த ஆண்டும் நடக்க வாய்ப்புள்ளதால், அந்தந்த மாநில போலீசாரிடம் நடவடிக்கை தேவை என்றும், வாகனங்களுக்கும், டிரைவருக்கும் பாதுகாப்பு கேட்டும் கோரிக்கை விடுத்துள்ளோம். இருந்தாலும் வரும், 27ல் விநாயகர் சதுர்த்தி என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழக லாரி உரிமையாளர்கள், இன்று முதல் வரும், 30 வரை, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் லாரிகளை காலியாக நிறுத்த வேண்டாம். 'லோடு' இறக்கியதும், திரும்பி வந்துவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.