/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'எலைட்' மதுக்கடை அகற்றக்கோரி மருத்துவர்கள் சாலை மறியல்
/
'எலைட்' மதுக்கடை அகற்றக்கோரி மருத்துவர்கள் சாலை மறியல்
'எலைட்' மதுக்கடை அகற்றக்கோரி மருத்துவர்கள் சாலை மறியல்
'எலைட்' மதுக்கடை அகற்றக்கோரி மருத்துவர்கள் சாலை மறியல்
ADDED : செப் 03, 2025 02:37 AM
சேலம், இந்திய மருத்துவ சங்கத்தின் சேலம் மாவட்ட அலுவலக கட்டடம், சேலம், 5 ரோட்டில் உள்ளது. அதன் அருகே, தமிழக அரசின், 'எலைட்' மதுக்கடை, 3 ஆண்டாக செயல்படுகிறது. அங்கு வருவோர், மருத்துவ சங்க அலுவலகம் முன், வாகனங்களை நிறுத்துகின்றனர்.
இது மருத்துவர்கள், அலுவலகம் வருவதில் இடையூறு ஏற்படுகிறது. அந்த மதுக்கடையை அகற்றக்கோரி, முதல்வர் தனிப்பரிவு, மாவட்ட நிர்வாகம், போலீசாரிடம் முறையிட்டும் பலனில்லை.
இதனால் சங்கத்தின், சேலம் மாவட்ட முன்னாள் தலைவர் பிரகாசம் தலைமையில், 100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மதுக்கடை முன், நேற்று சாலை மறியலில் ஈடுபட்டு, அந்த கடையை அகற்ற கோஷம் எழுப்பினர்.அழகாபுரம் போலீசார், பேச்சு நடத்தினர். அப்போது, கலால் தாசில்தார் செல்லதுரை, 'இன்னும், 30 நாட்களில் வேறு இடத்துக்கு கடை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். இதையடுத்து அவர்கள், மறியலை கைவிட்டனர். இச்சம்பவத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முன்னதாக பா.ம.க.,வை சேர்ந்த, சேலம் மேற்கு தொகுதி, எம்.எல்.ஏ., அருள், மறியலில் ஈடுபட்டு ஆதரவு தெரிவித்தார். சங்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் மோகன சுந்தரம், செயலர் விஷ்ணு பிரசாத், பொருளாளர் சிவக்குமார் உள்பட பலர்
பங்கேற்றனர்.