/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வாய் சிதறி நாய் பலி மர்மப்பொருள் வெடிப்பு?
/
வாய் சிதறி நாய் பலி மர்மப்பொருள் வெடிப்பு?
ADDED : ஜன 13, 2025 03:03 AM
பனமரத்துப்பட்டி: சேலம் மாவட்டம் பாரப்பட்டியை சேர்ந்தவர் சபரிநாதன், 38. கோழி இறைச்சி கடை நடத்துகிறார். அவர் வளர்த்து வந்த கோம்பை ரக நாய், நேற்று வாய் சிதறி பலியானது.
இதுகுறித்து சபரிநாதன் கூறியதாவது: காலை, 6:00 மணிக்கு இயற்கை உபாதை கழிக்க, நாயை அவிழ்த்து விட்டேன். வீடு அருகே தேக்கு மர புதர் பகுதிக்கு சென்றது. சிறிது நேரத்தில் பயங்கர வெடி சத்தம் கேட்டது. அப்போது வாய் கிழிந்து ரத்தம் சொட்டியபடி நாய் ஓடி வந்தது. வெடி மருந்து போன்ற பொருளை நாய் கடித்திருக்கலாம். இதுகுறித்து மல்லுார் போலீசில் புகார் அளித்தேன். மதியம், 1:30 மணிக்கு நாய் இறந்து விட்டது. சம்பவ இடத்தில் போலீசார் ஆய்வு செய்-தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'வெடிக்காத பெரிய ரக பட்-டாசு போன்ற பொருளாக இருக்கலாம். அதை நாய் கடித்துள்ளது. இது ஆபத்தான வெடி மருந்து இல்லை. இதை திட்டமிட்டு செய்திருக்க வாய்ப்பில்லை. தற்செயலாக நடந்துள்ளது. இருப்-பினும் விசாரிக்கிறோம்' என்றனர்.