/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நாய்கள் அட்டகாசம் குழந்தைகள் காயம்
/
நாய்கள் அட்டகாசம் குழந்தைகள் காயம்
ADDED : செப் 20, 2024 02:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, சந்தியூர் ஊராட்சி
யில் சமீப காலமாக தெருநாய் தொல்லை அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் காலை தாயுடன் சென்ற, 4 வயது குழந்-தையின் கன்னத்தில் நாய் கடித்தது. உடனே ராசிபுரம் அரசு மருத்-துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மாலையில், 3 வயது குழந்தை நாய் கடித்து குதறியது. இதனால் பெற்றோர் அச்சம-டைந்தனர். இதுகுறித்து ஊராட்சி தலைவர் சரவணக்குமார் கூறுகையில், ''நாய்களின் தொல்லை குறித்து அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.