/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மகளிர் தொகையை காரணம் காட்டி கட்டுமான ஓய்வூதியத்தை மறுக்காதே!
/
மகளிர் தொகையை காரணம் காட்டி கட்டுமான ஓய்வூதியத்தை மறுக்காதே!
மகளிர் தொகையை காரணம் காட்டி கட்டுமான ஓய்வூதியத்தை மறுக்காதே!
மகளிர் தொகையை காரணம் காட்டி கட்டுமான ஓய்வூதியத்தை மறுக்காதே!
ADDED : ஏப் 28, 2025 07:10 AM
சேலம்: இந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளம் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு, தமிழ்நாடு மாநில, 7வது மாநாடு, சேலம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே நேற்று நடந்தது. மாநில கன்வீனர் தனலட்சுமி தொடங்கி வைத்தார்.
அதில் கட்டுமான நலவாரிய கூட்ட முடிவின்படி, 55 வயது பூர்த்தியான பெண் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், 3,000 ரூபாய் வழங்குதல்; மகளிர் உரிமைத்தொகை பெறுவதை காரணம் காட்டி கட்டுமான ஓய்வூதியத்தை மறுக்காதே; சம வேலைக்கு சம ஊதியம் வழங்குதல்; குழந்தைப்பேறு கால நிவாரணம் வேண்டும்; பெண்கள் பணிபுரியும் இடங்களில் கழிப்பிட வசதியை கட்டாயமாக்குதல்; குழந்தைகள் காப்பக வசதி செய்து கொடுத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்டுமான உழைக்கும் பெண் ஒருங்கிணைப்பு குழு மாநில கன்வீனர் லுார்து ரூபி, கட்டுமான சங்க மாநில சம்மேளன தலைவர் பெருமாள், சிறப்பு தலைவர் சிங்காரவேலு, சி.ஐ.டி.யு., தொழிற்சங்க மாநில பொருளாளர் மாலதி உள்பட பலர் பங்கேற்றனர்.