ஏற்காடுக்கு சுற்றுலா வராதீங்க! திருப்பி அனுப்பும் போலீஸ்
ஏற்காடுக்கு சுற்றுலா வராதீங்க! திருப்பி அனுப்பும் போலீஸ்
UPDATED : அக் 26, 2026 03:14 AM
ADDED : அக் 26, 2026 01:44 AM

சேலம்: வடகிழக்கு பருவமழையால், சேலம் மாவட்டம் ஏற்காடில் சில நாட்களாக அதிக அளவில் மழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பாதைகள் வழியே ஆங்காங்கே தண்ணீர் அருவி போல் ஓடுவதால், மாவட்ட நிர்வாகம் சார்பில், முன்னெச்சரிக்கை நடவ-டிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
வரும் நாட்களில் அதிக மழைப்பொழிவுக்கு வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கையாக, உள்ளூர் மக்கள், மழை நேரத்தில் வாகனங்களில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும். சுற்றுலா பயணியர், வாகனங்களில் ஏற்காடு வருவதை தவிர்க்க வேண்டும் என, கலெக்டர் இளம் பகவத் அறிவுறுத்தி உள்ளார். அதன் எதிரொலியாக, சுற்றுலா வந்த வாகன ஓட்டிகளை நேற்று, ஏற்காடு அடிவாரத்திலேயே தடுத்து நிறுத்தி, போலீசார் திருப்பி அனுப்பினர்.
இதையடுத்து, ஏற்காடில் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கை-களை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக சுற்றுலா பயணி-யரின் வாகனங்களை அடிவாரத்தில் நிறுத்தி திருப்பி அனுப்பினர். ஏற்காடில் தங்கி உள்ள சுற்றுலா பயணியரையும் வெளியேற்றும் பணிகளிலும் ஈடுபட்டனர். மேலும் தொடர் மழை, பனி மூட்-டத்தால், படகு இல்ல ஏரி முழுதும் தெரியாத சூழல் நிலவியது. இதனால் படகு இல்ல நிர்வாகம், படகு இயக்கத்தை நிறுத்தியது. இதனால் படகு இல்லம் மட்டுமின்றி, ஏற்காடு முழுதும் வெறிச்-சோடியது. அதேநேரம் மழை குறையும் நேரத்தில் மட்டும் படகு இல்ல ஊழியர்கள் ஓட்டி செல்லும் மோட்டார் படகுகள் மட்டும் இயக்கப்பட்டன.
