/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பராமரிப்பு பணி தொடங்க கதவணை நீர் வெளியேற்றம்
/
பராமரிப்பு பணி தொடங்க கதவணை நீர் வெளியேற்றம்
ADDED : மே 10, 2025 01:56 AM
மேட்டூர்,மேட்டூர் அணை அடிவாரம் முதல், ஒவ்வொரு, 10 கி.மீ.,க்கும், கரூர் வரை, காவிரி குறுக்கே, 7 கதவணை மின் நிலையங்கள் உள்ளன. அதில் தலா, 0.45 டி.எம்.சி., நீர் தேக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதவணையிலும் அதிகபட்சம், 30 வீதம், 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம்.
அதற்கு அதிகபட்சம் காவிரியில் வினாடிக்கு, 18,000 முதல், 20,000 கனஅடி நீர் வெளியேற்ற வேண்டும். தற்போது அணையில் இருந்து குடிநீருக்கு, காவிரியில் வினாடிக்கு, 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அந்த நீரை தேக்கி வைத்து, மாலை, 6:00 முதல் இரவு, 10:00 மணி வரை வினாடிக்கு, 7 முதல், 9 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
ஆண்டுதோறும் கதவணைகளில், 15 முதல், 20 நாட்கள் பராமரிப்பு பணி நடக்கும். அதன்படி செக்கானுார் கதவணை மின் நிலைய பராமரிப்பு வரும், 15ல் தொடங்க உள்ளது. இதற்கு நேற்று காலை முதல், மேட்டூர் அணை அடிவாரம் முதல் தேங்கி நின்ற தண்ணீர், செக்கானுார் கதவணை வழியே வெளியேற்றி, 1 முதல், 2 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. சில நாட்களில் முழுமையாக தண்ணீரை வெளியேற்றி நெருஞ்சிப்பேட்டை கதவணையில் நிரப்ப்படும். பின் பராமரிப்பு பணி ஜூன், 8ல் நிறைவடைந்த பின், மீண்டும் செக்கானுார் கதவணையில் தண்ணீர் தேக்கப்படும்.