sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 27, 2025 ,புரட்டாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'கேப்'பில் காசு கொடுத்தால் மது! சட்டவிரோத விற்பனை படுஜோர்

/

'கேப்'பில் காசு கொடுத்தால் மது! சட்டவிரோத விற்பனை படுஜோர்

'கேப்'பில் காசு கொடுத்தால் மது! சட்டவிரோத விற்பனை படுஜோர்

'கேப்'பில் காசு கொடுத்தால் மது! சட்டவிரோத விற்பனை படுஜோர்


ADDED : ஜூலை 25, 2024 01:08 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி: வாழப்பாடி, பேளூர் பிரிவு சாலை அருகே டாஸ்மாக் கடை உள்-ளது.

அதற்கு பக்கத்திலேயே, கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. அதில் சிறு இடைவெளி ஏற்படுத்தி, சட்டவிரோதமாக மதுபா-னங்கள் விற்கப்படுகின்றன. அங்கு, ஏராளமான குடிமகன்கள், காலை, 6:00 மணி முதலே வந்து, மதுபாட்டில்களை வாங்கி செல்-கின்றனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்-களில் பரவி வருகின்றன.அதேபோல் வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்-பள்ளி, அங்குள்ள மயானம் அருகே, குறிச்சி, சோமம்பட்டி பகுதி-களிலும் சட்டவிரோத முறையில் மது விற்பனை அமோகமாக நடக்கிறது. திறந்தவெளியிலும், மக்கள் கூடும் பகுதிகளில் மொபட்டில் வைத்தும் விற்பனை ஜோராக நடக்கிறது. பாட்டி-லுக்கு ரகத்தை பொறுத்து, 50 முதல், 100 ரூபாய் வரை கூடுதலாக வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து புகார் கொடுத்-தாலும், வாழப்பாடி போலீசார், கண்டும், காணாமல் உள்ளனர். அதனால் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க, சேலம் எஸ்.பி., நடவடிக்கை எடுக்க, மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us